முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகள் அமாலி ரம்புக்வெல்ல இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று வியாழக்கிழமை (29) முன்னிலையாகியுள்ளார்.
வாக்குமூலம் வழங்குவதற்காகவே அமாலி ரம்புக்வெல்ல இவ்வாறு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
இந்நிலையில், அமாலி ரம்புக்வெல்ல வாக்குமூலம் வழங்கிய பின்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

