யேர்மனியில் München நகரத்தில் இருந்து விழிப்புணர்வு ஊர்திப் பயணம் ஆரம்பிக்கப்பட்டது.

341 0

தமிழின அழிப்புக்கு நீதிகோரி நேற்றைய தினம் யேர்மனியில் München நகரத்தில் இருந்து விழிப்புணர்வு ஊர்திப் பயணம் ஆரம்பிக்கப்பட்டது. பிரசித்தி பெற்ற உயர்கல்வி சாலையின் வளாகத்துக்கு முன்பாக தமிழின அழிப்பின் கொடூரத்தை வெளிப்படுத்தும் தகவல்கள் அடங்கிய பதாதைகள் வீதிகள் ஓரம் வைக்கப்பட்டு , மனிதநேய பணியாளர்களால் யேர்மன் மொழியிலும் , ஆங்கிலமொழியிலும் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. அத்தோடு München நகரபிதாவின் அலுவலகத்துக்கு சென்று ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டி , தமிழினத்துக்கு நடந்தது ஒரு இனவழிப்பு என்பதை அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தி யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவையாலும் ,யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பாலும் மனுவும் கையளிக்கப்பட்டது.

அத்தோடு Bayern மாநில ஆளுநர் அலுவலகத்துக்கும் மனு கையளிக்கப்பட்டது.

இன்றைய தினம் விழிப்புணர்வு ஊர்திப் பயணம் தொடர்ந்து Augsburg நகரத்துக்கு சென்று அங்கு நகர மத்தியில் ( Königsplatz ) காலை 10 மணியில் இருந்து 12 மணிவரை தமிழின அழிப்பை எடுத்துரைக்கும் கண்காட்சி அமைத்து நீதி கோரும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது. விழிப்புணர்வு ஊர்திப் பயணத்தில் 5 மனிதநேய பணியாளர்கள் தொடர்ச்சியாக பங்கெடுக்கவுள்ளார்கள்.