ஏறாவூரில் அதிகளவு அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபதாரம் செலுத்துமாறு திங்கட்கிழமை (26) ஏறாவூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடை ஒன்றில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த உப்பினை பொது சுகாதர பரிசோதகர்கள் கைப்பற்றி பகுப்பாய்வுக்கு அனுப்பியதில் அதிகளவான அயடீன் கலந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து குறித்த உப்பை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர் ஏறாவூர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்ததனர்.
இந்நிலையில், கடை உரிமையாளருக்கு அபராதம் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டதுடன் உப்பு தயாரிக்கப்படும் இடத்தை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பொது சுகாதார பரிசோகருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

