யாழ்ப்பாணம் மருத்துவ சங்கத்தின் ஏற்பாட்டில் சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியில் மருத்துவ முகாமும் மர நடுகை வேலைத்திட்டமும் அண்மையில் முன்னெடுக்கப்பட்டது.
கல்லூரி பழைய மாணவரும் வைத்தியருமான சசிகரனின் ஒழுங்கமைப்பில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.
யாழ்ப்பாண மருத்துவ சங்கத்தின் தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்களின் பங்கேற்புடன் குறித்த நிகள்வு நடைபெற்றது.
இதன் போது பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தொற்றா நோய்கள் மற்றும் வீதி விபத்து தொடர்பாக விழிப்புணர்வு கருத்தரங்கு இடம்பெற்றது.
தொற்றா நோய்கள் தொடர்பான கருத்தமர்வை வைத்தியர் சிவரஞ்சனியும் வீதி விபத்துகள் தொடர்பான கருத்தமர்வை குழந்தை சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர் சயந்தனும் மேற்கொண்டனர்.






