சுவிஸ் நகரமொன்றில் இளைஞர் ஒருவர் துப்பாக்கியுடன் நடமாடுவதாக வெளியான தகவலால் பெரும் பரபரப்பு உருவானது.
சுவிட்சர்லாந்தின் சூரிக் மாகாணத்திலுள்ள Geroldswil என்னுமிடத்தில் இளைஞர் ஒருவர் துப்பாக்கி ஒன்றுடன் நடமாடுவதைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
உடனடியாக குறிப்பிட்ட இடத்துக்கு ஒரு ஹெலிகொப்டர், ஆம்புலன்சுடன், ஏராளமான ஆயுதம் தாங்கிய பொலிசாரும் விரைந்துள்ளனர்.
ஆனால், அது ஒரு பொம்மைத்துப்பாக்கி என்று தெரிவித்துள்ள பொலிசார், பொதுமக்களுக்கு ஆபத்து எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 15 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டு பொலிஸ் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளான்.
இதற்கிடையில், அந்த சிறுவன் வைத்திருந்தது வெறும் விளையாட்டுத் துப்பாக்கி என்று அவனுடன் படிக்கும் மாணவர்கள் கூறியுள்ளனர்.
என்றாலும், பொலிசார் அதை இன்னமும் உறுதி செய்யவில்லை. ஆகமொத்தத்தில், அந்த இளைஞரால் பொலிஸ் படையே சம்பவ இடத்தில் குவிய, அதனால் பெரும் பரபரப்பு உருவானதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

