ஜேர்மனியில் ரயில் நிலையம் ஒன்றில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்ட விடயம் தொடர்பில் இளம்பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜேர்மனியில் மீண்டும் ஒரு கத்திக்குத்து தாக்குதல்
ஜேர்மனியின் ஹாம்பர்க் நகரிலுள்ள பிரதான ரயில் நிலையத்தில் நேற்று மாலை நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலால் பெரும் பரபரப்பு உருவானது.
அந்த தாக்குதலில் சுமார் 17 பேர் வரை காயமடைந்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் நான்கு பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 39 வயதுள்ள ஜேர்மன் நாட்டவரான பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிசார் அந்தப் பெண்ணை நெருங்கியதும், அவர் எந்த எதிர்ப்பும் இன்றி தன்னைக் கைது செய்ய அனுமதித்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அந்த பெண் தாக்குதல் நடத்தியதன் பின்னணியில் எந்த அரசியல் நோக்கமும் இருப்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என பொலிசார் தெரிவித்துள்ள நிலையில், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

