அமெரிக்க எரிசக்தி துறையில் இந்திய வம்சாவளிக்கு உயர்பதவி

251 0

அமெரிக்காவின் எரிசக்தி துறையில் முக்கிய அமைப்பாக திகழ்கிற மத்திய எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினராக நீல் சாட்டர்ஜியை ஜனாதிபதி டிரம்ப் நியமனம் செய்துள்ளார்.

அமெரிக்காவின் எரிசக்தி துறையில் முக்கிய அமைப்பாக திகழ்கிற மத்திய எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினராக நீல் சாட்டர்ஜியை (வயது 40) ஜனாதிபதி டிரம்ப் நியமனம் செய்துள்ளார். கென்டக்கியில் வசித்து வரும் இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார்.

இவர் அமெரிக்க பாராளுமன்ற செனட் சபையில் ஆளுங்கட்சி தலைவராக உள்ள மிட்ச் மெக்கனல்லின் எரிசக்தி கொள்கை ஆலோசகராக இருந்து வருகிறார்.

நாட்டின் முக்கியமான எரிசக்தி, நெடுஞ்சாலை சட்டம் ஒன்று நிறைவேறியதில் நீல் சாட்டர்ஜி முக்கிய பங்கு வகித்தார்.

இவர் செயின்ட் லாரன்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டமும், சின்சினாட்டி பல்கலைக்கழக சட்ட கல்லூரியில் பயின்று சட்டப்பட்டமும் பெற்றவர் ஆவார்.

நீல் சாட்டர்ஜியின் நியமனத்துக்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளிக்க வேண்டும். அங்கு ஆளும் குடியரசு கட்சிக்கு மெஜாரிட்டி இருப்பதால் இந்த நியமனம் எளிதில் கிடைத்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.முக்கிய பதவியான மத்திய எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினர் பதவி காலியாக இருந்து வந்தது குறித்து எம்.பி.க்கள் கவலை எழுப்பிய நிலையில், நீல் சாட்டர்ஜியை அந்தப் பதவியில் ஜனாதிபதி டிரம்ப் அமர்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.