பணிப்பாளரை பதவி நீக்கினார் ட்ரம்ப்

237 0

அமெரிக்காவின் பிராந்திய புலனாய்வு பிரிவான எப்.பி.ஐ.யின் பணிப்பாளர் ஜேம்ஸ் கோமேயை, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவி நீக்கியுள்ளார்.

வெள்ளை மாளிகை இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

முன்னாள் ராஜாங்க செயலாளர் ஹிலரி கிளின்டனது சர்ச்சைக்குரிய மின்னஞ்சல்கள் குறித்த விசாரணைகளை அவர் கையாண்ட விதம் தொடர்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால் இந்த குற்றச்சாட்டை ஜனநாயக கட்சி மறுத்துள்ளது.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான ரகசிய தொடர்பு குறித்த விசாரணைகளை மேற்கொள்வதாலேயே அவர் பதவி நீக்கப்பட்டுள்ளதாக ஜனநாயக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.