வெல்லம்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

97 0

வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொலன்னாவ பகுதியில், சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் திங்கட்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழுவொன்றுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், அஹுகம்மன பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் ஆவார்.

இதனையடுத்து  கைதான சந்தேகநபர், 4,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டிய பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.