அநுராதபுரத்தில் தங்க நிற புத்தர் சிலை உள்ளிட்ட பொருட்களுடன் மூவர் கைது

115 0
அநுராதபுரம் இப்பலோகம பொலிஸ் பிரிவின் கலாவெவ கடவற தேவாலயத்திற்கு அருகில், தொல்பொருள் பெறுமதிமிக்க தங்க நிற புத்தர் சிலை மற்றும் மாணிக்க கற்கள் போன்ற முக்கிய பொருட்களை வைத்திருந்த சந்தேக நபர்கள் மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவர்கள் வெள்ளிக்கிழமை (16) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள்,  31, 41, மற்றும் 47, வயதுடைய குருநாகல் பண்டார, கொஸ்வத்த மற்றும் மாழுலிய பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து, தங்க நிற புத்தர் சிலை மற்றும் மாணிக்க கற்களுக்கு சமமான எட்டு கற்கள் உட்பட சந்தேக நபர்கள் பயணித்த வான் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இப்பலோகம பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

விசாரணைகள் முடிந்த பின்னர், சந்தேக நபர்கள் கெக்கிராவ நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.