திருகோணமலை மாவட்ட சிவில் அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் திருகோணமலையின் சில சிவில் அமைப்புகளின் இளைஞர்கள் ஒன்றிணைந்து திருகோணமலை ஆனந்தபுரி பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சியினை மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (18) வழங்கினர் .
உயிர் நீத்த உறவுகளுக்கு நினைவு கூறும் நிகழ்வும் உணர்வுபுர்வமாக நடைபெற்றது.




