முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவு நாளான ஞாயிற்றுக்கிழமை (18) முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு ஆலயங்களில் விசேட திருப்பலியும் முள்ளிவாய்கால் கஞ்சியும் வழங்கப்பட்டு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
கத்தோலிக்க ஆலயங்களில் திருப்பலியின் ஆரம்பத்தில் பொது சுடர் ஏற்றப்பட்டதுடன் உயிரிழந்தவர்களை நினைத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து திருப்பலி இடம்பெற்றது. சில ஆலயங்களில் இதற்கென விசேடமாக உருவாக்கப்பட்ட நினைவிடத்தில் முள்ளிவாய்வாலில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வு சமநேரத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.





