மத்திய மாகாண போக்குவரத்து அதிகார சபை தலைவர் இராஜினாமா

140 0

மத்திய மாகாண சபையின் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தலைவர் தனது பதவியை இராஜினாமாச் செய்துள்ளார்.

தற்போதைய அரசு பதவிக்கு வந்ததன் பிறகே மேற்படி பதவிக்கு ஏ.கே. இவஙகேஸ்வர என்ற இவருக்கு மேற்படி நியமனம் வழங்கப்பட்டது.  இவர் ஓய்வு பெற்ற உதவிப் பொலீஸ் அத்தியட்சகர் ஆவார்.

மேற்படி பதவியை இராஜினாமாச் செய்து உரிய கடித்ததை மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோனிடம் கையளித்துள்ளதாக ஆளுநர் காரியாலயம் தெரிவிக்கிறது.

மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் கீழ் கண்டி, மாத்தளை, நுவரெலியா மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 3000 தனியார் பஸ்வண்டிகள் பதிவு செய்யப்பட்டு அவை தொடர்பான வழிகாட்டல் மற்றும் முகாமை என்பன இவ் அதிகார சபையாலே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.