முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் காட்சிகளை வெளிக்காட்டும் கண்காட்சி 15-05-2025 தொடக்கம் டென்மார்க் தலைநகரத்தின் நகரசபை முன்றலில் தொடங்கி மூன்றாவது நாளாக 17-05-2025 அன்றும் காட்சிப்படுத்தப்பட்டது. இக்கண்காட்சியானது தமிழின அழிப்பிற்கு நீதி கோரி நடத்தப்படுகின்றது. முள்ளிவாய்க்காலில் இனவழிப்பு செய்யப்பட்ட மக்களை நினைவுகூர்ந்து ஈகச்சுடரேற்றி, அகவணக்கம் செலுத்தி இக்கண்காட்சி ஆரம்பிக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் மண்ணில் குழந்தைகள், பெண்கள், வயோதிபர்கள் என எந்தவித வேறுபாடுமின்றி தமிழன் என்ற காரணத்தினால் இரத்த வெறி பிடித்த அரச பயங்கரவாதம் எம் உறவுகளைக் கொத்துக்கொத்தாய்க் கொன்று குவித்தது. அந்தக் காட்சிகளையே இன்று கண்காட்சிகளாக வைத்து, பல்லின மக்களுக்குக் காட்டி, சர்வதேசத்திடம் எமது மக்களுக்கு நீதி வேண்டி நிற்கிறோம். கண்காட்சி நடைபெறும் இடத்தில் வேற்றின மக்களுக்குத் துண்டுப்பிரசுரமும் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கி அவர்களுடன் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டனர்.

.




