தென் கொரியாவில் குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல்

225 0

தென் கொரியாவில் குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலின் வாக்குப்பதிவு துவங்கியுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து அவர் பதவி விலகினார்.

தென் கொரியாவில் குடியரசுத் தலைவராக இருந்த பார்க் கியூன்-ஹை மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து அவர் பதவி விலகினார். இதைத் தொடர்ந்து அங்கு குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி வாக்குப்பதிவுகள் துவங்கியுள்ளது.

பரபரப்பான சூழலில் நடைபெறும் இந்த தேர்தலில் மூன் ஜே-இன் மற்றும் அன்-சீயோல்-சூ களத்தில் உள்ளனர். முந்தைய அரசு மூலம் ஏற்பட்டிருக்கும் பின்னடைவை சரி செய்வதாக மூன் தனது இறுதி பிரச்சாரத்தின் போது உறுதியளித்திருந்தார். இதோடு அன்-சீயோலும் வெற்றி பெறுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தென் கொரிய வரலாற்றில் முதல் முறையாக ஊழல் குற்றச்சாட்டை தொடர்ந்து பார்க் கடந்த மார்ச் மாதம் பதவி விலகினார். இதைத் தொடர்ந்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை போன்று வாக்குப்பதிவுகள் துவங்கி நடைபெற்று வருகிறது. ஒட்டு மொத்த மக்கள் தொகையில் தற்சமயம் வரை 26 சதவிகிதம் பேர் வாக்களித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.