யோஷித்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்சி பொரெஸ்ட் ஆகியோருக்கு எதிரான மனு எதிர்வரும் ஜூலை மாதம் 11 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (16) உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது யோஷித்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்சி பொரெஸ்ட் ஆகியோர் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.
இதன்போது நீதிமன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ் இந்த மனு தொடர்பான சாட்சியங்களை நீதிமன்றில் முன்வைத்திருந்தார்.
யோஷித்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்சி பொரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ்ஸினால் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை கருத்தில் கொண்ட நீதவான் இந்த மனு எதிர்வரும் ஜூலை மாதம் 11 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உத்தரவிட்டுள்ளார்.

