யாழ். கோப்பாய் வைத்தியசாலையில் பணிபுரியும் சிற்றூழியர் ஒருவர், வாந்தி எடுத்து உயிரிழந்துள்ளார்.
குறித்த மரணம் இன்றையதினம்(11.05.2025) சம்பவித்துள்ளது.
நீர்வேலி – பூதர்மடை ஒழுங்கை சேர்ந்த 41 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
இதய நோய் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது

