இலங்கையில் தமிழ் சிங்க இனங்களுக்கு இடையில் புரிந்துணர்வினையும் ஜக்கியத்தினையும் ஏற்படுத்துவதில் கனடா நாட்டு அரசாங்கம் கன்னும் கருத்துமாக இருக்கும் என்று யாழ்.வருகைதந்த அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஸ்ரிபன் டியோன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த அவர் இங்குள் பல்வேறுதரப்பட்டவர்களையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன் ஒரு அங்கமாக நேற்று நண்பகல் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண முதலமச்சர் செயலகத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் அவர் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
இக் கலந்துரையாடலிலேயே அவர் மேற்கண்டவாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அக் கலந்துரையாடலில் ஸ்ரிபன் டியோன் மேலும் தெரிவிக்கையில்:-
இனங்களுக்க இடையில் புரிந்துணவர்கவுகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எமது நாட்டு அரசாங்கம் மேற்கொள்ளும். நாட்டு மக்கள் முன்னேற வேண்டும்.அக்கியம் ஏற்பட வேண்டும், புரிந்துணர்வு ஏற்பட வேண்டும், கன்னும் கருத்துமாக இருப்பதாகவும், இரு மொழிகளில் பாண்டித்தியம் பெற்றுக் கொள்வதற்கு கனடா நாடு நிதிவழங்கும்.மேலும் இலங்கைக்கும் குறிப்பாக வடக்கிற்கு எதிர்காலத்தில் செய்யப்பட உள்ள உதவித்திட்டங்கள் என்ன என்பது தொர்பாக தற்போது அடையாளப்படுத்தப்படும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறிப்பாக நாட்டில் உள்ள தமிழ் சிங்கள மக்கள் இரு மொழியிலும் பாண்டித்தியம் பெற்றுக் கொள்வதற்கான செயற்றிட்டங்களை நடமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. அத்திட்டங்களுக்கான நிதி வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.எந்த தருணத்திலும் தமிழ் மக்கள் நன்மை பெறுவதற்கு கனடா ஒத்துழைப்பு வழங்கும். கனடா நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்கள் மிக நல்ல நிலையில் இருக்கின்றார்கள். அவர்களுடைய வாகழ்கை முறை எங்கிருந்தாலும் நல்லாக இருக்க வேண்டும் என்ற ஆர்வம் எங்களிடம் உள்ளது என்றார்.