படல்கும்புர பகுதியில் சட்டவிரோத சுரங்கப் பணியில் ஈடுபட்ட 6 பேர் கைது

75 0
படல்கும்புர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓயஆர பகுதியில், சட்ட விரோதமாக சுரங்கப் பணிகளில் ஈடுபட்டு வந்த ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தல பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள், படல்கும்புர மற்றும் மெதகம பிரதேசங்களைச் சேர்ந்த 32, 37, 45, 50 மற்றும் 59 வயதுடையவர்கள் ஆவர்.

இதனைத்தொடர்ந்து, கைதானவர்கள் சுரங்க உபகரணங்களுடன் படல்கும்புர பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை படல்கும்புர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.