கொட்டாஞ்சேனையில் மாணவியின் விசாரணையை மேற்கொள்ளும் பொலிஸ் குழுவினருடன் பிரதமர் சந்திப்பு

102 0
கொட்டாஞ்சேனையில் உயிரை மாய்த்த மாணவியின் பெற்றோர் மற்றும் அது தொடர்பான விசாரணையை மேற்கொண்டுவரும் பொலிஸ் குழுவினருடன் பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்திப்பொன்றை முன்னெடுத்துள்ளார்.

இந்த சந்திப்பு இன்று சனிக்கிழமை (10)  பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் மற்றும் பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பின் போது, சிறுமியின் மரணத்திற்குக் காரணமாக இருந்ததாகக் கூறப்படும் பாடசாலை மற்றும் மேலதிக நேர வகுப்பில் நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் குறித்து விரைவான, நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொள்ளுமாறு பொலிஸ் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டது..

சம்பவம் பதிவான தருணத்திலிருந்து பொருத்தமான நடைமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்பட்டுள்ளனவா என்பதை மதிப்பிடுவதற்காக கல்வி அமைச்சு தற்போது ஒரு உள்ளக விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

மேலும், இதுபோன்ற சம்பவங்களுக்கு பதிலளிப்பதற்குப் பொறுப்பான அரச நிறுவனங்களுக்கிடையில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க, சிறுவர் நல மருத்துவ நிபுணர் வைத்தியர் அஸ்வினி பெர்னாண்டோ தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.