இந்த விபத்து வெள்ளிக்கிழமை (9) மாலை இடம்பெற்றுள்ளது.
ரம்பேவையில் இருந்து பயணித்த வேன் ஒன்று, கடையின் அருகே நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியுடன் மோதி அருகிலிருந்த மின்கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக அநுராதபுரம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.