தீவகத்தில் சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துவரும் சிவபூமி அறக்கட்டளை! – ஆறு திருமுருகன்

88 0

நொத்தாரிசு சுப்பிரமணியம் இல்லம் சிவ பூமி அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டுள்ளதன் மூலம்  சிவபூமி அறக்கட்டளையானது வேலணையில் தமது பணியினை ஆற்றவுள்ளது என அதன் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

வேலணை வங்களாவடி வீதியில் அமைந்துள்ள அமரர் நொத்தாரிசு சுப்பிரமணியம்  இல்லத்தை அவரது நினைவாக அவரது குடும்பத்தவர்கள் சிவபூமி அறக்கட்டளைக்கு தர்மசாதனமாக வழங்கியுள்ளார்கள். இதன் மூலம்  சிவ பூமி அறக்கட்டளை தீவகம் தமது பணியை ஆரம்பிக்கவுள்ளது. இதற்கான ஆரம்ப வேலைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றார்.