18 அடி நீளமுடைய திமிங்கிலம் ஒன்றே இவ்வாறு உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.
இதனை கண்ட மீனவர்கள் சிலர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
பின்னர் பொலிஸார் இது தொடர்பில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.
இந்த திமிங்கிலம் நீண்ட நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

