போலி பொலிஸ் அதிகாரிகள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

90 0

பொலிஸ் அதிகாரிகள் என கூறி பல்வேறு பிரதேசங்களில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு பொதுமக்களிடமிருந்து பெறுமதியான பொருட்களை அபகரிக்கும் கும்பல் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான கும்பல் தொடர்பில் தகவல் கிடைத்தால் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பொலிஸ் அதிகாரிகளின் பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் இவ்வாறான கும்பலுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.