தமிழரசு கட்சி பலவீனமடையவில்லை!

137 0
image
இலங்கை தமிழரசுகட்சி பலவீனமடையவில்லை தமிழ்தேசிய கூட்டமைப்பாக சேர்ந்து இருந்ததை விட தற்போது தனியாக பலமாக வெளிவந்திருக்கின்றது எனஇலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது-

கடந்த தேர்தல்களிலே தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் ஆணைகிடைத்திருக்கவில்லை.25வீத வாக்குகளை மாத்திரம் எங்கள் யாழ்;ப்பாணத்திலே பெற்றுவிட்டு தங்களிற்கு மக்கள் ஆணை கிடைத்துள்ளது என அவர்கள் தெரிவித்தது தவறான கருத்து ஆனால் தனியொரு கட்சியாக

2018 இல் தமிழ்தேசிய கூட்டமைப்பாக நாங்கள் போட்டியிட்டு பெற்ற வெற்றியை விட தனியாக இம்முறை நாங்கள் போட்டியிட்டு பெற்ற வெற்றி மேலானது.

நான் கடந்த காலங்களில் கூறிவந்திருக்கின்றேன் ஒரு கட்சி தனியாக போட்டியிடுவதை தவிர்த்து ஒன்றாகயிருக்கின்ற கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டு பின்னர்,நிர்வாகங்களை அமைப்பது சாத்தியமானது என.

அந்த கணக்கு தற்போது பலருக்கு புரியும் புரியவரும்.

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும்.

இலங்கை தமிழரசுகட்சி பலவீனமடையவில்லை தமிழ்தேசிய கூட்டமைப்பாக சேர்ந்து இருந்ததை விட தற்போது தனியாக பலமாக வெளிவந்திருக்கின்றது.

ஆகவே தற்போது தமிழ்தேசிய கூட்டமைப்பிலே இருந்தவர்கள்,தற்போது ஜனநாயக தமிழ்தேசிய கூட்டமைப்பாக உள்ளனர் அவர்களும்  எதிர்காலத்தில் எங்களிற்கு வாய்ப்பளிக்கின்ற போது எல்லா இடங்களிலும் நாங்கள் இவ்வாறான நிலையை சந்திக்ககூடியதாகயிருக்கும் .