திருகோணமலை மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்களிப்பு

74 0

திருகோணமலை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு செவ்வாய்க்கிழமை (06) அமைதியான முறையில் ஆரம்பமாகியுள்ளன.

அந்தவகையில்,  வாக்களிப்பு மையங்களில்  பொலிஸார் மற்றும் அதிரடி படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் செவ்வாய்க்கிழமை (06) உள்ளூராட்சி சபை தேர்தல் மிக சுமுகமான முறையில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றமை  குறிப்பிடத்தக்கது.