திருகோணமலை மாவட்டத்தின் தேர்தல் மத்திய நிலையமான திருகோணமலை விபுலானந்தா கல்லூரியில் இருந்து உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகளை உரிய இடங்களுக்கு திங்கட்கிழமை (05) அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
திருகோணமலை தி. விபுலானந்தா கல்லூரியிலிருந்து வாக்குப்பெட்டிகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உரிய வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படுள்ளன.
செவ்வாய்க்கிழமை (06) நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் காரணமாக பொலிஸார் மற்றும் அதிரடி படைகள் பாதுகாப்பு கடமைகளில் ஈடுப்பட்டுள்ளனர்.




