தேர்தல் சார்ந்த நடவடிக்கைகளை புகைப்படம், காணொளி எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட தடை

102 0

நாளை செவ்வாய்க்கிழமை (06) நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுடன் தொடர்புடைய நடவடிக்கைகளை புகைப்படம் அல்லது காணொளி எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிடுவது தேர்தல் சட்டங்களை மீறும் செயல்களாகும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனவே, வாக்களிக்கும் சந்தர்ப்பங்களையும் வாக்குச் சீட்டுகளையும் புகைப்படம் அல்லது காணொளி எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.