கலேவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சியம்பலகஹவெல பிரதேசத்தில் 07 உள்நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் செப்புச் சுருளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சியம்பலகஹவெல பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இதேவேளை, பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கமுவ பிரதேசத்தில் உள்நாட்டுத் துப்பாக்கி மற்றும் 12 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 04 தோட்டாக்களுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

