உலகின் மிகவும் வயதான நபரான பிரேசிலிய கன்னியாஸ்திரி இனா கனபரோ லூகாஸ், தமது 116 ஆவது வயதில் காலமானார்.
இவர் 1908 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் திகதி பிறந்துள்ளார். 1934-ம் ஆண்டு தனது 26 வயதில் கன்னியாஸ்திரியாகியுள்ளார்.
இனாஹ் கனாபாரோ உடல்நலக்குறைவு காரணமாக புதன்கிழமை (30) உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அவர் எப்போதும் தனது பிறந்தநாளை தனக்கு பிரியமான ஸ்போர்ட் கிளப் இன்டர்நேஷனல் – போர்டோ அலெக்ரேவின் கால்பந்து அணி அரங்கத்தின் வடிவத்தில் செய்யப்படட்ட கேக்குடன் கொண்டாடுவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இனாஹ் கனாபாரோ மறைவுக்குப் பின்னர் உலகின் அதிக வயதான பெண் என்ற பட்டம், பிரித்தானியாவைச் சேர்ந்த 115 வயதான எதெல் கேட்டர்ஹாமுக்குச் சென்றுள்ளது.
கேட்டர்ஹாம் எட்டு பிள்ளைகளில் இரண்டாவது இளையவராக 1909 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஹாம்ப்ஷயரில் உள்ள கிராமம் ஒன்றில் பிறந்துள்ளார்.
Brazilian nun Sister Inah Canabarro Lucas ; Credit: Guiness World Records

Brazilian nun Sister Inah Canabarro Lucas ; Credit: Guiness World Records

