பஸ் கட்டணங்கள் குறைக்கப்பட மாட்டாது – கெமுனு விஜேரத்ன

154 0
எரிபொருள் விலைகள் குறைவடைந்தாலும் பஸ் கட்டணங்கள் குறைக்கப்பட மாட்டாது என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்று புதன்கிழமை (30) நள்ளிரவுடன் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டன.

ஆனால், பஸ் கட்டணங்களை குறைப்பதற்கு வாய்ப்பு இல்லை.

பஸ் கட்டணங்களை குறைக்க வேண்டுமானால் டீசல் விலை 25 ரூபா முதல் 30 ரூபா வரை குறைப்பட வேண்டும்.

இதேவேளை, மே தின கூட்டங்களுக்காக பஸ் சேவைகள் வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.