கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து மாநகர சபை உறுப்பினருக்குரிய விடயங்களை நிறைவேற்றுவோம் – ஐ.தே.க வேட்பாளர் பிரணவா

130 0

ஒட்டுமொத்த வெள்ளவத்தை வாக்காளர்களும் தவறாமல் எதிர்வரும் 6ஆம் திகதி யானைக்கு நேராக புள்ளடியிட்டு எங்களை வெற்றியடையச் செய்யும்போது நாங்களே கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து மாநகர சபை உறுப்பினருக்கு உரிய விடயங்களை நிறைவேற்றுவோம் என வெள்ளவத்தை வடக்கு வட்டார ஐ.தே.க வேட்பாளரான ஆர்.பிரணவா தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் வெள்ளவத்தை வடக்கு வட்டார ஐ.தே.க வேட்பாளரான ஆர்.பிரணவா அண்மையில் வெள்ளவத்தையைச் சேர்ந்த தொழில்சார் வல்லுநர்களை சந்தித்தபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வெள்ளவத்தை வடக்கு வட்டார இரட்டை அங்கத்தவர் தொகுதியில் நானும் தமிழ் நன்றாகக் கதைக்கக்கூடிய சமூக சேவகியுமான சகோதரி முத்துக்குமாரியும் போட்டியிடுகின்றோம்.

அதேபோல் வெள்ளவத்தை தெற்கில் தொழில் முயற்சியாளரும் மக்களால் நன்கு அறியப்பட்டவருமான அஞ்சுகுமார, ஐ.தே.க சார்பில் போட்டியிடுகிறார்.

எனவே, ஒட்டுமொத்த வெள்ளவத்தை வாக்காளர்களும் தவறாமல் எதிர்வரும் 6ஆம் திகதி யானைக்கு நேராக புள்ளடியிட்டு எங்களை வெற்றியடையச் செய்யும்போது நாங்களே கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து மாநகர சபை உறுப்பினருக்கு உரிய விடயங்களை நிறைவேற்றுவோம் என்றார்.