வவுனியாவில் 73 ஆவது நாளாகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
படையினரிடம் கையளிக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் பதிலளிக்க கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரியும் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கோரியுமே இப்போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன்போது உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், அரசியல் கட்சிகள் தாங்கள் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் இருந்தும் எதுவும் செய்யவில்லை எனவும், இனியும் அவ்வாறு இல்லாமல் தங்களது பிரச்சனைகளை முன்னெடுத்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு ஒரு முடிவினைப் பெற்றுத்தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்