கண்டியில் 600 மெற்றிக் தொன் திண்மக்கழிவுகள் வீதிகளில் எறியப்பட்டுள்ளன

117 0

கண்டி ஶ்ரீ தலதா தரிசனத்திற்கு வந்தவர்களால் சுமார் 600 மெற்றிக் தொன் திண்மக்கழுவுகள் வீதிகளில் வீசி எறியப்பட்டுள்ளதாகவும் இது ஒருவரால் சராசரி ஒரு கிலோ என்ற அடிபபடையில் அமைந்துள்ளதாகவும்  கண்டி மாநகர சபை தெரிவித்துள்ளது.

கண்டி மாநகர சபையின் திண்மக்கழிவுகள் தொடர்பான பொறுப்பதிகாரி பிரதான பொறியிலாளர் தம்மிக திசாநாயக்கா இதனை தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

27 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை கண்டி, கொஹாகொடை திண்மக் கழிவு சேகரிக்கும் பிரிவுக்கு 528 மெற்றிக் தொன் திண்மகழிவுகள் சேகரித்துள்ளனர்.

இது 27 ஆம் திகதி மாலை சேகரிக்கும் கழிவுகளுடன் சேர்ந்து அடுத்த நாளாகும் போது 600 தொன்களையும் கடந்து விடலாம்.

இதில் அதிகளவு பொலிதீன் பைகள் காணப்படுகின்றன. அவற்றில் அதிகமானவற்றில் மலசல கழிவுகளும் சேர்த்து எரியப்பட்டுள்ளன. இவற்றைப் தரம் பிரிப்பதில் பாரிய சிரமம் இருக்கின்றது.

வகை தொகையற்ற முறையான திட்டமிடல் இல்லாத அன்னதான சாலைகள் (தன்சல்) காரணமாகவே இவ்வாறு அதிக கழிவுகள் அதிகரித்துள்ளன.  அவற்றைக் கையாண்டவர்களது பொறுப்பற்ற தன்மையும் இதற்குக் காரணமாகும்.

இந்த கழிவுகள் ஶ்ரீ தலதா தரிசனம் இடம்பெற்ற கடந்த 10 நாட்களில் சேகரிக்கப்பட்ட கழிவுகள் ஆகும்.  எனவே இப்படியான நேரங்களில் இனிமேல் முறையான திட்டத்தின் அடிப்படையில் அன்னதான சாலைகளை கட்டுப்படுத்த அல்லது முகாமை செய்யப்பட வேண்டும் என்றார்.