ரணில் விக்ரமசிங்க இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை

57 0
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று திங்கட்கிழமை (28) முன்னிலையாகியுள்ளார்.

ஊவா மாகாண முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் நிதி மோசடி வழக்கு தொடர்பாக வாக்கு மூலம் அளிப்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

கடந்த 17 ஆம் திகதி இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவருக்கு அன்று முன்னிலையாக முடியாது என தெரிவித்திருந்த நிலையில் அதற்கு பதிலாக இன்றையதினம் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.