முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரே மாவட்டம் திருகோணமலை

153 0

ஒப்பீட்டு விகிதாசார அடிப்படையில் ஆகக்கூடிய முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரே மாவட்டம் திருகோணமலை மாவட்டமாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு சனிக்கிழமை (26) மாலை  மூதூர் கலாசார மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வேட்பாளர் மற்றும் மக்கள் சந்திப்புகளில் பங்கு பற்றி உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந் நிகழ்வில் ஒப்பீட்டு விகிதாசார அடிப்படையில் ஆகக்கூடிய முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரே மாவட்டம் திருகோணமலை மாவட்டமாகும்.

எனவே இதனை நிரூபித்து காட்டுவது மட்டுமல்லாமல் முஸ்லிம்களும் இந்நாட்டின் கௌரவிக்கப் படவேண்டிய  ஒரு தேசிய இனம் என்பதையும் இம்மாவட்டத்தில் இம்முறை 6 கும் மேற்பட்ட உள்ளூராட்சி சபைகளின் ஆட்சியை கைப்பற்றி  இவ்வரசுக்கு தக்க பாடம் புகட்டுவோம்.

அதிலும்  மூதூர் முதன்மையானதாக வரலாற்றுரீதியான வெற்றியை மீண்டும் உறுதி செய்யும் என்ற நற்செய்தியை கேட்டு மிகவும் சந்தோசம் அடைகிறேன்.

இந்நிகழ்வில் முன்னாள் பிரதி அமைச்சர் எம்.எஸ் தௌபீக் –  தேசிய அமைப்பாளர்,கட்சியின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிரேஷ்ட சட்டத்தரணி ஜே. எம் லாஹிர் உட்பட வேட்பாளர்களான உமர் ஜவாத், PTM. பைசர், அப்துல் ஜாயா அனஸ், HMA மனாப், NMM. றம்சாத் ஆகியோர்களும் உரையாற்றினர்.