தம்பலகாம பிரதேச மாற்றுத் திறனாளிகளின் சுய உதவி குழு கூட்டம்

106 0

திறனாளிகளின் சுய உதவிக்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை (25) தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ. ஸ்ரீபதி வழிகாட்டலில் பிரதான மாநாட்டு  மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் போது, சுயஉதவி குழுக்களை எவ்வாறு வலுப்படுத்துவது, அவர்களின் வருமான மட்டத்தை எவ்வாறு அதிகரிப்பது மற்றும் மாற்றுத்திறனாளி சமூகத்தின் மனித உரிமைகள் குறித்தும் இதன் போது  கலந்துரையாடப்பட்டது.

மேலும் சுயஉதவி குழுக்களின் கடந்த கால செயல்பாடுகள் மற்றும் எதிர்கால செயல்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டது.

எதிர் வரும் தினங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் ஒன்றை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாக சிறுவர் அபிவிருத்தி நிதியத்தின் உத்தியோகத்தர் மூலமாக தெளிவூட்டல்கள் இடம் பெற்றன.

இதில் சமூக சேவைகள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் த.பிரணவன், சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பெண்கள் அபிவிருத்தி வெளிக்கள உத்தியோகத்தர் நஸ்ரின் திலானி மற்றும் சிறுவர் அபிவிருத்தி நிதியத்தின் (CDF)  உத்தியோகத்தர்கள் என பலரும்  கலந்து கொண்டனர்.