லிந்துலை முதல் டயகம வரையிலான பிரதான வீதி பல வருடங்களாக புனரமைப்பு செய்யாமல் காணப்படுகிறது. இருப்பின் டயகம நகர பிரதேசத்தில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊடாக பாதை அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் அப்பணி முறையாக இடம்பெறாத காரணத்தினால் வீதி முறையற்ற வகையில் செப்பனியிடுவதற்கு பிரதேச மக்கள் கொட்டும் மழைக்கு மத்தியில் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பி தங்களுடைய எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 60க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தன.
ஜனாதிபதியினால் வேலைத்திட்டங்களை முன்னெடுத்த போதிலும் இந்த வேலை திட்டங்கள் மக்களுக்கு சரியாக இடம் பெற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களின் கருத்துக்களை வெளியிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் டயகம பிரதான நகரத்தில் இரண்டு மணிநேரம் இடம் பெற்றது.
புனரமைப்பு செய்யப்பட்ட வீதி போக்குவரத்துக்கு இலாக்கியற்ற நிலையில் பாதை காணப்படுவதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குறிப்பிட்டனர்.




