முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட உயரிய விருதைப் பறிக்க மேக்ரான் எதிர்ப்பு

75 0

பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு வழங்கப்பட்ட கௌரவத்தைப் பறிப்பதற்கு பிரான்சின் இந்நாள் ஜனாதிபதியான மேக்ரான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

2007ஆம் ஆண்டு முதல், 2012ஆம் ஆண்டு வரை பிரான்ஸ் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் நிக்கோலஸ் சார்க்கோஸி.

2007ஆம் ஆண்டு, சார்க்கோஸி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது, தேர்தல் பிரச்சார செலவுகளுக்காக லிபியா நாட்டின் சர்வாதிகாரியான முஅம்மர் அல் கடாஃபி, நிக்கோலஸுக்கு பல மில்லியன் யூரோக்கள் பணம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

அந்த வழக்கில் சார்க்கோஸிக்கு ஓராண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

ஆகவே, சார்க்கோஸிக்கு வழங்கப்பட்ட Legion of Honour என்னும் பிரான்சின் உயரிய கௌரவத்தை, விருதை அவர் இழக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், பிரான்சின் இப்போதைய ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான், தான் சார்க்கோஸி மீது மரியாதை வைத்திருப்பதாகவும், அப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்படுமானால் தான் அதை எதிர்க்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளை மதிப்பது மிகவும் அவசியம் என நான் கருதுகிறேன் என்று கூறியுள்ள மேக்ரான், சார்க்கோஸிக்கு வழங்கப்பட்ட கௌரவத்தை பறிப்பது நல்ல முடிவாக இருக்காது என்றும் கூறியுள்ளார்.

விடயம் என்னவென்றால், ஒரு ஆண்டு சிறைத்தண்டனை அல்லது அதற்கு இணையான தண்டனை பெற்றவர்கள், Legion of Honour விருதை வைத்திருக்கமுடியாது என்பது அவ்விருது தொடர்பிலான விதியாகும்.