இயந்திரவியல் தொழில்நுட்ப பிரிவில் முதலிடம் பெற்று யாழ்.மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவன்!

82 0

2024ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

அந்தவகையில் இயந்திரவியல் தொழில்நுட்ப பிரிவில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவனான வியாகர்ணன் பிரவீன் மாவட்ட ரீதியாக முதலிடத்தையும் அகில இலங்கை ரீதியாக 97வது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

அவர் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் ஏ சித்தியையும், தொழில் நுட்பத்திற்கான விஞ்ஞானத்தில் ஏ சித்தியையும், இயந்திரவியல் தொழில்நுட்பத்தில் பி சித்தியையும் பெற்று சாதனை புரிந்துள்ளார்.