இது தொடர்பில் கைப்பற்றப்பட்ட கார்களின் சாரதிகளிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹோமாகம பிரதேசத்தில் கடந்த 13 ஆம் திகதி அதிக வேகத்துடன் இரண்டு கார்கள் பயணிக்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தன.
இதனையடுத்து, இது தொடர்பில் ஹோமாகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் நேற்றைய தினம் கார் ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்ட இரண்டு கார்களை கைப்பற்றியுள்ளனர்.

