கண்டி ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரை காரணமாக மூடப்பட்ட 24 பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்

84 0
கண்டி ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரை காரணமாக மூடப்பட்ட24 பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (28) வழமைபோன்று மீண்டும் ஆரம்பமாகும் என மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரை காரணமாக கண்டி நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பல பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருந்தன.

இந்நிலையில், அவற்றில் 24 பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை வழமைபோன்று மீண்டும் ஆரம்பமாகும் என மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஸ்ரீ தலதா மாளிகையின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் தங்கியுள்ள 37  பாடசாலைகளும் எதிர்வரும் 29 ஆம் திகதி வழமைபோன்று மீண்டும் ஆரம்பமாகும் என மத்திய மாகாண ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.