தடைப்பட்டிருந்த இறக்குமதி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

67 0
ஒரு சிறப்பான, நேர்த்தியான ஆட்சியை நாங்கள் நடத்தி வருகிறோம். அதுபோல இதுவரைக் காலமும் தடை செய்யப்பட்டிருந்த இறக்குமதி செயற்பாடுகள் பல கோணங்களில் தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன என வெளிவிவகார பிரதி அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் கட்சியின் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபைக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் களுதாவளை வட்டார வேட்பாளர் தேர்தல் அலுவலகம் இன்று வெள்ளிக்கிழமை (25) அருண் ஹேமசந்திரா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவினால் திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் வேட்பாளர்கள், கட்சிப் பிரதிநிதிகள், பொது மக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.