மாத்தறை – தெவிநுவர பகுதியில் விஷ்ணு ஆலயத்திற்கு அருகில் உள்ள சிங்காசன வீதியில் இரண்டு நபர்களை சுட்டுக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கந்தர, தலல்ல தெற்கு பகதியில் வசிக்கும் 33 வயது சந்தேக நபரே நேற்று வியாழக்கிழமை (24) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இரட்டைக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட துப்பாக்கிதாரிகளுக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

