கடந்த பெப்ரவரி மாதம் மித்தெனிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கஜ்ஜா எனப்படும் அருண விதானகமகே மற்றும் அவரது இரு பிள்ளைகள் உயிரிழந்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் குறித்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.
குறித்த சம்பவத்தின் போது மோட்டார் சைக்கிளை செலுத்தியதாகத் தெரிவிக்கப்படும் சந்தேக நபரே இவ்வாறு இந்தியாவில் கைதுசெய்யப்பட்ட நிலையில், நாடு கடத்தப்பட்டுள்ளார்.

