வடமாகான சபையை முடக்கி பாரிய போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஜனநாயக போராளிகள் கட்சி அறிவிப்பு

270 0

கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் இன்றுடன் 68  ஆவது நாளை எட்டியுள்ளது.

41 மீனவக்குடும்பங்களும் 97 விவசாயக்குடும்பங்களும் தமது சொந்த நிலத்திற்காக தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தமது வாழ்வாதாரங்கள் அனைத்தையும் இழந்துள்ள மக்கள் ஏழு வருடங்களாக பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில் மக்களின் தொடர்போராட்டம் இன்றும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.எனினும் இதுவரை எந்தவொரு தீர்மானமும் முன்வைக்கப்படவில்லை என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை பதினோரு மணியளவில் கேப்பாபுலவு போராட்ட இடத்துக்கு வருகைதந்த ஜனநாயக போராளிகள் கட்சியினர் மக்களின் போராட்டத்துக்கு தமது ஆதரவை வழங்கியதோடு காநிவிடுவிப்பு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் வேலையில்லா பட்டதாரிகள் பிரச்சனை உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் உள்ளடக்கி மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்து அரசுக்கு அழுத்தமொன்றை குடுத்து பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்.