கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கருகில் சந்தேகத்தின் பேரில் கைதான இருவரும் விடுதலை

104 0

கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அருகில் நேற்று திங்கட்கிழமை (21) சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்ட பெண் உட்பட இருவரையும் விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (22) உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர்கள் இருவரும் கொழும்பு துறைமுக பொலிஸாரால் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் இருவரும் புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடியமையால் பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சந்தேக நபர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இதனை கருத்தில் கொண்ட நீதவான் சந்தேக நபர்கள் இருவரையும் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.