ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் 06 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு யாழ். பெரிய கோவிலில்

91 0

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் 06 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று யாழ். பெரிய கோவிலில் இடம்பெற்றதுள்ளது.

யாழ்ப்பாண மறை மாவட்ட பங்குததந்தை கலாநிதி ஜெபரட்ணம் அடிகளார் தலமையில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்வில் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் அவயவங்களை இழந்தவர்களுக்கான பிரார்த்தனைகள் இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து மெளன அஞ்சலி, சுடரேற்றல், மெழுகுவர்த்திகளைப் பற்ற வைத்து அஞ்சலிக்கப்பட்டிருந்ததுடன் இதன்போது விசேட அதிரடிப்படைமற்றும் பொலிசார் காவல் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

இதில் பங்குத் தந்தைகள், பாதிரியார்கள், பாடசாலை மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது