கேரள கஞ்சாவுடன் இருவர் கைது !

77 0
கேரள கஞ்சா மற்றும்  ஒரு தொகை பணத்துடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல்மாகாண வடக்கு குற்றப்பிரிவின் அதிகாரிகள் குழுவினால் நேற்று சனிக்கிழமை (19)  கட்டுவாப்பிட்டி மற்றும் கங்கோடெல்ல வீதி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட  சுற்றிவளைப்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள்  நீர்கொழும்பைச் சேர்ந்த 25 மற்றும் 48 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

கைது நடவடிக்கையின் போது, 122 கிலோ கிராம் 920 கிராம் கேரள கஞ்சா மற்றும்  கஞ்சா விற்பனை  மூலம் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 961,000 ரூபா  பணம்  என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.