எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இன்று புதன்கிழமை (16) அந்தந்த மாவட்டங்களின் அஞ்சல் திணைக்களங்களிடம் கையளிக்கப்பட்டவுள்ளதாக அஞ்சல் மா அதிபர் ருவன் சத்குமார அறிவித்துள்ளார்.
அதன்படி, வீடுகளுக்குச் சென்று வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படும் எனவும், குறித்த பணிகள் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.
கிளிநொச்சி
கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளுக்குமான வாக்காளர் அட்டைகள் அஞ்சல் திணைக்களத்திடம் புதன்கிழமை (16) கையளிக்கப்பட்டது.
மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் வைத்து மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் வே.சிவராசா மாவட்ட பிரதான அஞ்சல் அலுவலக உத்தியோகத்தரிடம் கையளித்தார்.
உள்ளூராட்சி சபை தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் 102,387 பேர் வாக்காளிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.




